யாழில் களமிறக்கப்பட்டுள்ள பொலிஸ் ரோந்துப் படையணி!
corona
police
jaffna
By Kalaimathy
யாழில் பொலிஸ் மோட்டார் சைக்கில் ரோந்துப் படையணி களமிறக்கப்பட்டுள்ளது.
நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா நோய் தொற்றினை கட்டுப்படுத்தும் முகமாக நாடு பூராகவும் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் யாழ்ப்பாண குடாநாட்டில் பயணத்தடை கட்டுப்பாடுகளை மீறி வீதியில் பயணிப்போரை கண்காணிப்பதற்காக யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ தலைமையில் பெண் பொலிஸாரையும் உள்ளடக்கிய பொலிஸ் மோட்டார் சைக்கிள் அணி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது
யாழ்ப்பாண குடா நாட்டின் முக்கிய வீதிகளில் வீதிகளில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் பொலிஸ் மோட்டார் சைக்கிள் அணி, பயணிப்போரை வழிமறித்து சோதனையில் ஈடுபடுவதோடு அத்தியாவசிய சேவை தவிர்ந்து பயணிப்போர் எச்சரிக்கை செய்யப்பட்டு வீடுகளுக்கு அனுப்பப்படுகிறார்கள்.






மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்