யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்: முக்கிய விடயங்கள் தொடர்பில் ஆராய்வு
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் இன்று (14) காலை 9 மணிக்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் ஆரம்பமாகி தற்போது நடைபெற்று வருகிறது.
வடக்கு மாகாண ஆளுநரும் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான நாகலிங்கம் வேதநாயகன் பங்கேற்புடன் நடைபெறும் இக்கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், கருணநாதன் இளங்குமரன், ஜெயசந்திரமூர்த்தி றஜீவன், சண்முகநாதன் ஸ்ரீ பவானந்தராஜா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
கலந்துரையாடப்படவுள்ள விடயங்கள்
மேலும், வடக்கு மாகாணப் பிரதி பிரதம செயலாளர், மாகாண அமைச்சுகளின் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், மாவட்டச் செயலகப் பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதி காவல்துறைமா அதிபர், முப்படைகளின் அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகள், திணைக்களத் தலைவர்கள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் , வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோரின் இணைத்தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் கல்வி, மருத்துவம், சுகாதாரம், குடிநீர் வசதி, உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
YOU MAY LIKE THIS
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |





