30 வருடங்களின் பின் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்ட கோப்பாய் காவல் நிலைய காணி

Sri Lanka Police Jaffna Tamil
By Theepan Oct 15, 2025 08:11 AM GMT
Report

யாழ்ப்பாணம் - கோப்பாய் காவல் நிலையம் அமைந்துள்ள காணி யாழ். நீதிமன்றின் பதிவாளர் முன்நிலையில் அதன் உரிமையாளர்களிடம் இன்று கையளிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் - கோப்பாய், இராசபாதையில் அமைந்துள்ள கோப்பாய் காவல் நிலையம், கடந்த 30 வருடங்களாக காவல்துறையினரின் கட்டுப்பாட்டிலும் பயன்பாட்டிலும் இருந்து வந்தது.

அந்த காணியின் உரிமையாளர்கள், காணியை தம்மிடம் கையளிக்குமாறு பல்வேறு தரப்பினரிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். எனினும், அதற்கு பலன்கிட்டவில்லை.

உரிமையாளருக்கே வழங்கப்படவுள்ள யாழ்.கோப்பாய் காவல்நிலைய காணி!

உரிமையாளருக்கே வழங்கப்படவுள்ள யாழ்.கோப்பாய் காவல்நிலைய காணி!

நீதிமன்றில் வழக்கு தாக்கல் 

இந்த நிலையில், 2019ஆம் ஆண்டு, காணிகளுக்கு சொந்தமான 07 உரிமையாளர்கள் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர். வழக்கு கடந்த 6 ஆண்டுகளாக யாழ் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த நிலையில், கடந்த ஜுன் மாதம் 27ஆம் திகதி வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.

30 வருடங்களின் பின் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்ட கோப்பாய் காவல் நிலைய காணி | Jaffna Kopay Police Station Land Issue

அதன் போது பொது மக்களின் காணியிலிருந்து வெளியேறி, அந்த காணியை உரிமையாளர்களிடம் கையளிக்க வேண்டுமென மாவட்ட நீதிபதி சி.சதீஸ்கரன் உத்தரவிட்டார்.

எனினும், இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை காவல்துறையினர் காணியை உரிமையாளர்களிடம் கையளிக்கவில்லை.

கடலில் மிதந்து வந்த பொதிகள்..! அழிவில் விளிம்பில் இலங்கை: அதிர்ச்சியில் காவல்துறை

கடலில் மிதந்து வந்த பொதிகள்..! அழிவில் விளிம்பில் இலங்கை: அதிர்ச்சியில் காவல்துறை

தற்காலிகமாக மாற்றம்

இந்த நிலையில், இன்றையதினம் புதன்கிழமை நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற, நீதிமன்ற பதிவாளர் கோப்பாய் காவல் நிலையம் அமைந்துள்ள பகுதிக்கு வருகைதந்து, அங்குள்ள காவல்துறையினரை வெளியேற்றி, காணியை உரிமையாளர்களிடம் கையளித்தனர்.

30 வருடங்களின் பின் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்ட கோப்பாய் காவல் நிலைய காணி | Jaffna Kopay Police Station Land Issue

தற்போது கோப்பாய் காவல் நிலையம் யாழ்ப்பாணம் காவல் நிலையத்திற்கு தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளது.

கோப்பாய் காவல் நிலையம் தனித்து இயங்குவதற்கு தேவையான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கோப்பாய் காவல் நிலையம் அமைந்துள்ள காணியின் உரிமையாளர்கள் தமக்கு காணி இல்லை என வேறு இடத்தில் நீண்ட காலமாக வாசித்து வந்தனர். இன்றைய தினம் காணி கையளிக்கப்பட்டதால் அவர்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டனர்.

காட்டிக் கொடுத்தது இவர் தான்..! இஷாரா செவ்வந்தி வழங்கிய பரபரப்பு வாக்குமூலம்

காட்டிக் கொடுத்தது இவர் தான்..! இஷாரா செவ்வந்தி வழங்கிய பரபரப்பு வாக்குமூலம்

மனுஷ நாணயக்காரவுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

மனுஷ நாணயக்காரவுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!        
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026