யாழில் விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே இளைஞன் பலி!
Sri Lanka Police
Jaffna
Sri Lanka
Accident
By Theepan
யாழில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.
யாழ் பண்ணைப் பகுதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
அச்சுவேலி பாரதி வீதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வாகனப் பயிற்சி
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பண்ணைப் பகுதியில் வாகனப் பயிற்சியை மேற்கொண்டதன் பின்னர் வாகனத்திலிருந்து வீதியில் இறங்கியுள்ளார்.

இதன்போது வீதியின் பின்புறத்திலிருந்து வந்த லொறி மோதியதில் குறித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
விபத்துச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாண காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்