‘திரிபோலி குழு’ ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் பிள்ளையான் : சாணக்கியன் குற்றச்சாட்டு
திரிபோலி குழு தொடர்பில் பல விடயங்களை வெளிப்படுத்தும் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களை பிள்ளையான் அச்சுறுத்தியுள்ளார்.
இந்த குழுவால் எனக்கும் ஏதும் பாதிப்பு ஏற்படுமா என்ற அச்சம் காணப்படுகிறது என்று நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெளிவற்ற வகையில் எம்மீது குற்றஞ்சாட்டுகிறார்.
எம்மை விமர்சிப்பதை விடுத்து வெளியாகியுள்ள விடயங்கள் குறித்து விசாரணை செய்யுங்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.
சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை பொதுஜன பெரமுனவினர் தங்களின் ஆளணி பலத்துடன் தோற்கடிப்பார்கள்.
ஆனால் மக்கள் மத்தியில் செல்லும் போது நம்பிக்கையில்லா பிரேரணைக்கு அப்பாற்பட்ட வகையில் தகுந்த பாடத்தை கற்பிப்பார்கள் என்பதை பொதுஜன பெரமுனவினர் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை இன்றைய மாலை நேர செய்தித் தொகுப்பில் காண்க.