யாழில் இரண்டாம் சங்கிலிய மன்னனின் 407 சிராத்ததின நிகழ்வு!
இரண்டாம் சங்கிலிய மன்னனின் 407ஆவது சிரார்த்த தினத்தை முன்னிட்டு யாழில் அமைந்துள்ள சங்கிலிய மன்னன் அரண்மனையில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற உள்ளதாக சங்கிலிய மன்னன் அறக்கட்டளையின் செயலாளர் சிவத்தொண்டர் சிறீந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழில் இன்று(04.06.2026) இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இரண்டாம் சங்கிலிய மன்னன்
“சைவத்தையும் தமிழையும் வளர்ப்பதற்கு அரும்பாடுபட்ட இரண்டாம் சங்கிலிய மன்னனின் சிராத்த தினத்தை ஏழு வருடங்களாக செய்து வருகிறோம்.

அந்த வகையில் எதிர்வரும் ஆறாம் சனிக்கிழமை காலை 9 மணிக்கு யாழ் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள சங்கிலிய மன்னனின் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கும் நிகழ்வு இடம்பெறும்.
அதனைத் தொடர்ந்து ஜமுனா எரிக்கி ஊர்வலமாகச் சென்று பூஜை வழிபாடுகள் இடம் பெற்று பின்னர் சங்கிலிய மன்னனின் அரண்மனையில் நிகழ்வுகள் ஆரம்பமாகும்.
இம்முறை விசேடமாக சங்கிலிய மன்னனின் வாழ்க்கை வரலாற்றை கண்காட்சியாக நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள நிலையில் குறித்த நிகழ்வுக்கு சைவ அடியவர்கள் அனைவரும் பங்கு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என அவர் மேலும் கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பாரிய இனச்சிக்கல்களுக்கு வழிகோலிய தனிச்சிங்களச் சட்டம்…. 5 மணி நேரம் முன்