மட்டக்களப்பில் மாவீரர் தின நிகழ்விற்கு தடை(படங்கள்)
மட்டக்களப்பு மாவட்டம் மாவடிமுன்மாரி துயிலும் இல்லத்தில் மாவீரர் தின ஏற்பாடுகளை செய்துகொண்டிருந்த போது கொக்கட்டிச்சோலை காவல்துறையினர் அங்கு சென்று நீதவானால் கையொப்பம் இடப்பட்ட தடை உத்தரவு கட்டளை கையளித்து துயிலும் இல்லத்தில் மாவீரர் நினைவு வணக்க ஏற்பாடுகளை செய்யவிடாமல் தடுத்துள்ளனர்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், மற்றும் பட்டிப்பளை பிரதேச முன்னாள் தவிசாளர் சி.புஷ்பலிங்கம் இருவரிடமும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிவானால் கையொப்பம் இடப்பட்ட தடை உத்தரவு கட்டளையை கையளித்தனர்.
தடை உத்தரவு
அந்த தடை உத்தரவில் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன், இரா.சாணக்கியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஷ்வரன், ஞா.ஶ்ரீநேசன், தமிழ்தேசிய மக்கள் முன்னணி த. சுரேஷ், மட்டக்களப்பு மாநகரமுன்னாள் முதல்வர் தி.சரவணபவான் உட்பட 19, பெயர்கள் அந்த கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தாலும் வாகரை காவல்துறையினர் வாகரை கண்டலடி துயிலும் இல்லத்தில் மாவீர ர் தினம் செய்யவிடாமல் 23, பெயர்களை குறிப்பிட்டு தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |