பிரதான நீர்த்தேக்கத்திற்கு அருகில் திடீரென ஏற்பட்ட பாரியகுழி
rain
kotmale
massivepit
By Sumithiran
ஹட்டன் – கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு செல்லும் பிரதான நுழைவாயில் வீதியில் திடீரென 06 அடிக்கு பாரிய குழி ஒன்று ஏற்பட்டிருக்கின்றது.
கொத்மலை பகுதியில் பெய்த கடும் மழை காரணமாக வீதி இன்று புதன்கிழமை இவ்வாறு தாழிறங்கியிருப்பதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் ரஞ்சித் அலஹகூன் தெரிவித்தார்.
இதனால் கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு எந்தவிதமான சேதமும் ஏற்படவில்லை என்று பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக, நீர்த்தேக்கத்தின் கீழ் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அச்சப்பட ஒன்றுமில்லை என்றும் அவர் கூறினார்.
பாதிப்பை சரிசெய்வதற்கான முயற்சிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இதனால் அந்தப்பகுதி ஊடான போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்