தேர்தலில் தனித்து களமிறங்குமா தமிழரசுக் கட்சி..! நிலைப்பாட்டை வெளிப்படுத்திய மாவை
உள்ளூராட்சி சபைத் தேர்தல்
இலங்கையில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தனித்து போட்டியிடுவது ஒன்றுமையினை பாதிக்கும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
இதனால் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது தொடர்பில் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுவில் கூடி கலந்துரையாடி இறுதி முடிவை மேற்கொள்ளவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.
சுமந்திரனின் கருத்து
இதேவேளை, அதிக ஆசனத்தை பெறுவதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகள் தனித்து போட்டியிடுவது தொடர்பில் தொழில்நுட்ப ரீதியில் விடயங்களை ஆராய்ந்து வருவதாகவும், உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தனித்து போட்டியிடுவது பற்றி பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடன் உத்தியோகபற்றற்ற விதத்தில் பேசியதாவும், அவர்கள் சாதகமான நிலைப்பாட்டில் இருந்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அண்மையில் தெரிவித்திருந்தார்.
இதற்கு, கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான புளொட் அமைப்பின் யாழ். மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பா.கஜதீபன் கடும் அதிருப்தியை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)