கூட்டமைப்பிலிருந்து பிரியும் தமிழரசுக் கட்சியின் முடிவு - புளொட் வெளியிட்ட தகவல்

Sri Lankan Tamils TNA M. A. Sumanthiran
By Vanan Dec 12, 2022 12:27 PM GMT
Report

தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்துசென்று இலங்கை தமிழரசுக் கட்சி தனித்து போட்டியிட்டாலும், ஏனைய தரப்புக்கள் ஒன்றிணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பாகவே போட்டியிடும் என தமிழ் தேசியப் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான புளொட் தெளிவுபடுத்தியுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நேற்று(11) நடந்தது. இதன்போது, உள்ளூராட்சி தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி தனித்துப் போட்டியிட வேண்டுமென உறுப்பினர்கள் சிலர் வலியுறுத்தினர்.

தனித்து போட்டியிடுவது தொடர்பில் ஆராய்வு

கூட்டமைப்பிலிருந்து பிரியும் தமிழரசுக் கட்சியின் முடிவு - புளொட் வெளியிட்ட தகவல் | Tamil Parties Election Idea Tna Kajatheepan

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், அதிக ஆசனத்தை பெறுவதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகள் தனித்து போட்டியிடுவது தொடர்பில் தொழில்நுட்ப ரீதியில் விடயங்களை ஆராய்ந்து வருவதாக தெரிவித்திருந்தார்.

முன்னதாக, கட்சியின் மத்திய குழுவில் கருத்து தெரிவித்திருந்த எம்.ஏ.சுமந்திரன், உள்ளூராட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவது பற்றி பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடன் உத்தியோகப்பற்றற்ற விதத்தில் பேசியதாகவும், அவர்கள் சாதகமான நிலைப்பாட்டில் இருந்ததாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த விடயம் தொடர்பில், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான புளொட் அமைப்பின் யாழ். மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பா.கஜதீபன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்தியகுழுவில் பேசப்பட்ட விடயம் பற்றி செய்திகளை பார்த்து அறிந்தேன். ஒவ்வொரு கட்சிக்கும் எப்படி தேர்தலை எதிர்கொள்வது என்பது பற்றி முடிவெடுக்கும் சுதந்திரம் உள்ளது. அது தமிழரசுக் கட்சிக்கும் உள்ளது.

என்றாலும், இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர்கள் யாரும் அந்த யோசனையை இதுவரை எம்மிடம் தெரிவிக்கவில்லை. கலந்துரையாடவுமில்லை.

புளொட்டின்  நிலைப்பாடு

கூட்டமைப்பிலிருந்து பிரியும் தமிழரசுக் கட்சியின் முடிவு - புளொட் வெளியிட்ட தகவல் | Tamil Parties Election Idea Tna Kajatheepan

தமிழ் தேசியக் கூட்டமைப்பை மேலும் பலப்படுத்தி, தமிழ் மக்களை ஓரணிப்படுத்தவே நாம் தொடர்ந்து முயன்று வருகிறோம். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையையே மக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

என்றாலும், தமிழரசுக் கட்சி தனித்து போட்டியிடுவதென்ற விரும்பத்தகாத, துரதிஷ்டவசமான முடிவெடுத்தாலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயலிழந்து விடுமென மக்கள் அச்சமடைய தேவையில்லை.

நாம் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக தொடர்ந்து செயற்படுவோம், தமிழ் தேசியக் கூட்டமைப்பாகவே தேர்தல்களில் போட்டியிடுவோம்” - என்றார்.

ReeCha
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015