மாவீரர் நாள் நிகழ்வுகளில் கார்த்திகை பூவை பயன்படுத்தக் கூடாது: காவல்துறையினர் அறிவுறுத்தல்
எதிர்வரும் வாரம் மாவீரர் நாள் நிகழ்வுகள் அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில், அந் நிகழ்வுகளில் விடுதலைப்புலிகளின் சின்னங்கள் மற்றும் அவர்களின் அடையாளர்களை பயன்படுத்தக் கூடாது என கிளிநொச்சி காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை தமிழ்த்தேசிய இளைஞர் பேரவையின் தலைவர் வ. நகுலன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த்தேசிய இளைஞர் பேரவையின் தலைவர் வ. நகுலன் மற்றும் பொதுச் செயலாளரர் ச.கீதன் ஆகியோரை நேற்றைய தினம்(19) கிளிநொச்சி காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விடுதலைப்புலிகள் சின்னங்கள்
விசாரணையின் போது, மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளில் விடுதலைப்புலிகள் பயன்படுத்திய சின்னங்கள் மற்றும் அடையாளங்களை பயன்படுத்தக் கூடாது என காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
குறிப்பாக கார்த்திகை பூவை கூட பயன்படுத்தக் கூடாது என்றும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் காவல்துறையினரின் நிபந்தனைகளை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என தமிழ்த்தேசிய இளைஞர் பேரவையின் தலைவர் வ. நகுலன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |