தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரால் நேசிக்கப்பட்டவர் மாவை : சூட்டப்பட்ட புகழாரம்
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனால் (Velupillai Prabhakaran), அதிகமாக நேசிக்கப்பட்டதொரு தலைவராக மாவை சேனாதிராஜா (Mavai Senathiraja) உள்ளதாக போராளிகளின் சார்பில் உரையாற்றிய ஈஸ்வரன் (Iswaran) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை நேற்றைய தினம் (02) மறைந்த மாவை சேனாதிராஜாவின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுகயீனம் காரணமாக கடந்த 28 ஆம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட மாவை சேனாதிராஜா, 29 ஆம் திகதி தனது 82 ஆவது வயதில் உயிரிழந்த நிலையில், நேற்றைய தினம் (02) அவரது இறுதி கிரியைகள் இடம்பெற்றது.
இந்த இறுதி கிரியை நிகழ்வுகளுக்கு தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (Sivagnanam Sridharan) தலைமை தாங்கியிருந்ததுடன் இந்நிகழ்வில் அரசியல் தலைமைகள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டு தமது கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.
இதில் தொடர்ந்து கருத்து தெரிவித்த ஈஸ்வரன், தலைவர் நேரடியாக சேனாதிராஜாவிடத்தில் தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்சியின் சின்னத்தைக் கோரியதோடு சேனாதிராஜா தலைமை தாங்குவதால் அக்கட்சியின் மீது அதிகமான நம்பிக்கையையும் கொண்டிருந்த நிலையில் அவ்விதமான அங்கீகாரங்களை தன்னகத்தே கொண்ட பெருந்தலைவர் சேனாதிராஜா என அவர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |