நோபல் பரிசை ட்ரம்பிடம் வழங்கிய மச்சாடோ...! அதிரடி அறிவிப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பிடம் தமது அமைதிக்கான நோபல் பரிசை வழங்கியதாக வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ தெரிவித்துள்ளார்.
வெனிசுலா மக்களின் சுதந்திரத்திற்காக டிரம்ப் மேற்கொண்ட அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும் வகையில் இதனைச் செய்ததாக மச்சோடா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
அமைதிக்கான நோபல் பரிசு
மச்சாடோ தனது பதக்கத்தை டிரம்ப்பிற்கு அளித்திருந்த போதிலும், அது நோபல் பரிசு வழங்கலின் விதிமீறலாக பார்க்கப்படுகின்றது.

நோபல் பரிசை பெறும் நபர் அதனை வேறொருவருக்கு மாற்றவோ, பகிரவோ அல்லது ரத்து செய்யவோ முடியாது என்று நோர்வே நோபல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்தப் பதக்கத்தை டிரம்ப் ஏற்றுக்கொண்டாரா என்பது தெரியவரவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
2025 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்குக்கு வெனிசுலா நாட்டின் மரியா கொரினா மச்சாடோவிற்கு (Maria Corina Machado) வழங்கப்பட்டிருந்தது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |