சுகாதார அமைச்சின் முறைகேடுகள் தொடர்பில் விசாரணை: நியமிக்கப்பட்ட குழுக்கள்
தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்தல் மற்றும் சுகாதார அமைச்சின் பல முறைகேடுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு குற்றப் புலனாய்வு திணைக்களம் மூன்று குழுக்களை நியமித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக முன்னாள் சுகாதார செயலாளர் உட்பட சுமார் 30 சுகாதார அமைச்சின் அதிகாரிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு, மருந்துகளை இறக்குமதி செய்வதில் கடைப்பிடிக்கப்பட்ட செயல்முறை தொடர்பாக விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
வாக்குமூலங்கள்
மேலும், இந்த சம்பவங்கள் தொடர்பாக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்லவிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துடன் இணைக்கப்பட்டுள்ள புலனாய்வுப் பிரிவினர், போலியான ஆவணங்களைத் தயாரித்து போலியான மருந்தை தயாரித்த நிறுவனத்தில் பணிபுரிந்த பணியாளர்களிடமிருந்தும் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் ... |