ஐரோப்பிய விமான நிலையங்கள் மீது சைபர் தாக்குதல்: ஒருவர் கைது
ஐரோப்பிய விமான நிலையங்களில் இணைய ஊருடுவல் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் பிரிட்டனின் தேசிய குற்றத்தடுப்பு முகைமை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “ஐரோப்பிய விமான நிலைய இணைவழி தாக்குதல் தொடா்பாக வெஸ்ட் சஸக்ஸ் மாவட்டத்தில் சுமாா் 40 வயது நபா் ஒருவர் கைது செய்யப்பட்டாா்.
இணையவழி ஊடுருவல்
இந்தச் சம்பவம் மிகப் பெரிய சதியின் ஒரு பகுதியா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெல்ஜியம் தலைநகா் பிரஸ்ஸெல்ஸ், பிரிட்டனின் லண்டன் மற்றும் ஜொ்மனி தலைநகா் பொ்லின் (படம்) உள்ளிட்ட ஐரோப்பிய நகரங்களின் சா்வதேச விமான நிலையங்களில் இணையவழி ஊடுருவல் தாக்குதல் நடத்தப்பட்டது.
மின்னணு முறை
இதில், மின்னணு முறையிலான பயணிகள் உள்நுழைவு (செக்-இன் மற்றும் போா்டிங்) நடைமுறைகள் பாதிக்கப்பட்டன.
இதனால் விமானப் போக்குவரத்து மிகவும் தாமதமாகி, பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
