யாழில் 2 வருடங்களுக்கு முன் அடக்கம் செய்யப்பட்ட நபர்: சடலத்தை தோண்டுமாறு நீதிமன்றம் அதிரடி

Mannar Sri Lanka Sri Lanka Police Investigation
By Harrish Jan 02, 2025 12:23 PM GMT
Report

மன்னார்(Mannar) நீதிமன்றத்தில் விபத்து வழக்குடன் தொடர்புடையவரின் சடலத்தை மீண்டும் தோண்டுமாறு மல்லாகம் நீதிமன்றம் விசேட உத்தரவு பிறப்பித்துள்ளது.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம், கல்லூண்டாயில் உள்ள சேமக்காலையில் அடக்கம் செய்யப்பட்ட 40 வயதுடைய ஜேசுதாசன் ரஞ்சித்குமார் என்பவரின் சடலமே இதன்போது தோண்டுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் மன்னார் - இலுப்பை கடவை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த குறித்த நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

யாழ். நகர்ப் பகுதியில் அட்டூழியம் செய்த வன்முறை கும்பல் : அதிரடியாக நால்வர் கைது

யாழ். நகர்ப் பகுதியில் அட்டூழியம் செய்த வன்முறை கும்பல் : அதிரடியாக நால்வர் கைது

நீதிமன்ற வழக்கு

அதன்பின்னர் நவாலி பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் தொடர்பாக மன்னார் நீதிமன்றத்திலும் வழக்கு உள்ள நிலையில் அவர் இரண்டு வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளார். 

இந்நிலையில், அவர் மூளைக்காய்ச்சல் காரணமாக உயிரிழந்ததாக வைத்தியர் ஒருவர் தெரிவித்ததையடுத்து கிராம சேவகரும் அதற்கு இணங்க பூர்வாங்க செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளார். 

யாழில் 2 வருடங்களுக்கு முன் அடக்கம் செய்யப்பட்ட நபர்: சடலத்தை தோண்டுமாறு நீதிமன்றம் அதிரடி | Mannar Accident Court Orders Exhumation Of Body

இதையடுத்து, கல்லூண்டாய் சென். பீற்றர் தேவாலய சேமக்காலையில் அவரது சடலம் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இது இவ்வாறு இருக்கையில் குறித்த நபர் மீதான விபத்து மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது குறித்த நபர் அங்கு பிரசன்னமாகவில்லை. 

அத்துடன்,குறித்த நபர் உயிரிழந்து, அவரது சடலம் யாழ்ப்பாணத்தில் புதைக்கப்பட்ட விடயம் அதன்பின்னரே நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

உலக செஸ் சாம்பியன் குகேஷ்க்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு

உலக செஸ் சாம்பியன் குகேஷ்க்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு

உடற்கூற்று பரிசோதனை

அந்தவகையில் சடலத்தை புதைத்த பகுதி மல்லாகம் நீதிமன்றத்தின் நியாயாதிக்க எல்லைக்குள் உள்ளமையால் இது குறித்து மல்லாகம் நீதிமன்றத்திற்கு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

யாழில் 2 வருடங்களுக்கு முன் அடக்கம் செய்யப்பட்ட நபர்: சடலத்தை தோண்டுமாறு நீதிமன்றம் அதிரடி | Mannar Accident Court Orders Exhumation Of Body

இவ்வாறான பின்னணியில் குறித்த நபரின் சடலத்தை நாளையதினம் (03) தோண்டி எடுத்து உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்புமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அதன்படி, நாளையதினம் குறித்த நபரின் சடலம் மல்லாகம் நீதிமன்ற நீதிவான், சட்ட வைத்திய அதிகாரி, தடயவியல் காவல்துறையினர் உள்ளிட்ட அதிகாரிகளின் முன்னிலையில் தோண்டப்படவுள்ளது.

மேலதிக தகவல் - கஜிந்தன்

முறையாக வரி செலுத்தினாலே குரங்கு பிரச்சினைக்கு தீர்வு : அசோக ரன்வல

முறையாக வரி செலுத்தினாலே குரங்கு பிரச்சினைக்கு தீர்வு : அசோக ரன்வல

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026