உலகின் மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கைக்கு கிடைத்த இடம்
2025 ஆம் ஆண்டில் உலகின் மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலில் இலங்கை (Sri lanka)168 ஆவது இடத்தை பெற்றுள்ளது.
குறித்த தரவரிசை பட்டியலானது NOMAD passport index ஆல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, 2025 ஆம் ஆண்டில் உலகின் மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டு என்ற அந்தஸ்தை அயர்லாந்து (Ireland) தனி ஒரு நாடாக வென்றுள்ளது.
கடவுச்சீட்டு பட்டியல்
இந்தப் பட்டியலில் சுவிட்சர்லாந்து இரண்டாவது இடத்தையும் கிரீஸ் மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளது.
அத்துடன், இந்தப் பட்டியலில் அயர்லாந்து தனி நாடாக முதலிடத்தைப் பிடிப்பது இதுவே முதல் முறை என்பதுடன் 2020 ஆம் ஆண்டில், அயர்லாந்து லக்சம்பர்க் மற்றும் ஸ்வீடனுடன் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டது.
விசா இல்லாத பயணம், வரிவிதிப்பு, நாட்டின் உலகளாவிய பிம்பம், இரட்டை குடியுரிமைக்கான சாத்தியம் மற்றும் தனிப்பட்ட சுதந்திரம் ஆகியவை உலகின் சிறந்த கடவுச்சீட்டிற்கான அளவுகோலாகக் கருதப்படுகிறது. அந்தவகையில், அயர்லாந்து 109 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது.
மேலும், இந்த பட்டியலில் அமெரிக்கா 45 ஆவது இடத்தைப் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
