வாக்கு வாதத்தால் மனைவியை கொலை செய்த கணவன் - வெளியான பின்னணி
அம்பலாந்தொட்ட,பெரகம பிரதேசத்தில் ஒருவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தினால், வெட்டி, கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று காலை நடந்துள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
வீட்டில் மனைவி இருக்கவில்லை

கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தால் இந்த கொலை நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கணவன் இன்று காலை 10 மணியனவில் வீட்டுக்கு வந்த போது, மனைவி வீட்டில் இருக்கவில்லை என்பதால், தொலைபேசி அழைப்பை எடுத்து மனைவியை வீட்டுக்கு வரவழைத்துள்ளார். இதன் பின்னர் இரண்டு பேருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றியத்தில் கணவன் கூரிய ஆயுதத்தினால் மனைவியை தாக்கியுள்ளதுடன் தான் அணிந்திருந்த மழை அங்கியை பயன்படுத்தி மனைவியின் கழுத்தை நெரித்துள்ளார்.
45 வயதான பெண்

இதன் பின்னர் சந்தேக நபரான கணவன், காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
45 வயதான பெண்ணே சம்பவத்தில் கொலை செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளை முன்னெடுத்து வரும் அம்பலாந்தொட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.