வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வோருக்கு வெளிவந்த அறிவிப்பு
வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வோருக்கான கொவிட் தடுப்பூசி செலுத்தியமையை உறுதிப்படுத்தும் ஸ்மார்ட் அட்டையை பெற்றுக்கொள்ள முடியும் என விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் நிறுவனம், சுகாதார அமைச்சு மற்றும் உலக சுகாதார ஸ்தாபனம் இணைந்து, இந்த திட்டத்தை முன்னெடுத்துள்ளன.
இதன்படி, https://covid-19.health.gov.lk/certificate/ என்ற இணைப்பின் ஊடாக பிரவேசித்து, ஸ்டார்ட் அட்டை தேவையான நபர்கள் அதனை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
For all those who require to travel overseas, @icta_srilanka together with the @MoH_SriLanka & @WHO have launched the #COVID19 smart vaccine certificate portal! Scan the code log in & follow the instructions to get your vaccine certificate! #ජයගමු?? #WeCan #Hope4sL #DigitalLKA pic.twitter.com/D0IprUibOp
— Namal Rajapaksa (@RajapaksaNamal) August 26, 2021