வல்வெட்டித்துறை நகரசபைக்குப் புதிய தவிசாளர் தெரிவு: திகதி அறிவிப்பு!
Sri Lankan Tamils
M. K. Shivajilingam
By Theepan
வல்வெட்டித்துறை நகரசபைக்குப் புதிய தவிசாளரைத் தெரிவு செய்வதற்கான விசேட கூட்டம் எதிர்வரும் 18.12.2026 அன்று காலை 10.30 மணிக்கு சபையின் மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் அறிவித்துள்ளார்.
வல்வெட்டித்துறை நகரசபையின் தவிசாளராகப் பதவி வகித்த எம்.கே. சிவாஜிலிங்கம் அமரத்துவமடைந்தமையைத் தொடர்ந்து, குறித்த தவிசாளர் பதவி வெற்றிடமாகியுள்ளது.
உள்ளூராட்சி ஆணையாளர் அறிக்கை
இதனையடுத்து, உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தின் விதிகளுக்கு அமையப் புதிய தவிசாளரைத் தெரிவு செய்வதற்கான நடவடிக்கைகளை மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் முன்னெடுத்துள்ளார்.

இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ள அறிவித்தலுக்கமைய, குறித்த தினத்தில் சபையின் அனைத்து உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் புதிய தவிசாளர் தெரிவு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி