செவ்வாய்க் கிரகம் போல் மாறும் அமெரிக்கா - பனிப்புயல் எச்சரிக்கை விடுத்த பைடன்

Joe Biden United States of America
By Dharu Dec 23, 2022 11:42 AM GMT
Report

அமெரிக்காவில் ஒரு தலைமுறைக்கு ஒரு முறை மட்டுமே ஏற்படும் மோசமான பனிப்புயல் இப்போது அங்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் அங்கு பெரும்பாலான பகுதிகளில் கடுங்குளிர் ஏற்பட்டுள்ளது. புவி வெப்பமயாமாதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உலகில் காலநிலை வேகமாக மாறி வருகிறது.

வெயில், குளிர் அல்லது மழை என எதுவாக இருந்தாலும், இதுவரை இல்லாத அளவுக்கு மிக மோசமான பாதிப்பு ஏற்படுகிறது.

மோசமான பாதிப்பு

செவ்வாய்க் கிரகம் போல் மாறும் அமெரிக்கா - பனிப்புயல் எச்சரிக்கை விடுத்த பைடன் | New Usa Bomb Cyclone Affectig Chirstmas Holidays

இப்படியான மோசமான பாதிப்பு தான் அமெரிக்காவில் உருவாகியுள்ளது.

இந்த தலைமுறையிலேயே இல்லாத அளவுக்கு அங்கு மிக மோசமான பனிப்புயல் இப்போது ஏற்பட்டுள்ளது.

இது கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது என அமெரிக்கா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விமானங்கள் ரத்து

செவ்வாய்க் கிரகம் போல் மாறும் அமெரிக்கா - பனிப்புயல் எச்சரிக்கை விடுத்த பைடன் | New Usa Bomb Cyclone Affectig Chirstmas Holidays

இதனால் அங்கு பெரும்பாலான பகுதிகளில் வெப்பம் -40 டிகிரி பாரனைட்டை தொட்டுள்ளது. இந்த மோசமான பனிப்புயலால் விமான நிலையங்கள் மூடப்பட்டு, ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும், முக்கிய நெடுஞ்சாலைகளும் மூடப்பட்டன. இப்போது குளிர் மிக மோசமாக உள்ள நிலையில், பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வருவதைத் தவிர்க்குமாறு அந்நாட்டு வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

போதிய பாதுகாப்பில்லாமல் வெளியே சென்றால் சில நிமிடங்களில் உறைந்துவிடும் அந்தளவுக்கு குளிர் உச்சத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 கோடி மக்கள்


இந்த கடுமையான பனி மற்றும் புயல் காற்று ஆண்டின் மிக முக்கிய விடுமுறை தினமான கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது.

அநேக விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பல லட்சம் மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் கிறிஸ்துமஸ் கொண்டாட முடியாத ஒரு சூழல் எதேர்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்நிலையில், பொதுமக்கள் மகிழுந்துகளில் தங்கள் சொந்த ஊருக்குப் செல்வதாகவும் இப்படி சுமார் 10 கோடி மக்கள் மகிழுந்துகளில் தங்கள் சொந்த ஊர் திருமபக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பைடன்

செவ்வாய்க் கிரகம் போல் மாறும் அமெரிக்கா - பனிப்புயல் எச்சரிக்கை விடுத்த பைடன் | New Usa Bomb Cyclone Affectig Chirstmas Holidays

அமெரிக்க அதிபர் பைடனும் இது தொடர்பாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "நீங்கள் குழந்தைகளாக இருக்கும்போது, பனி பெய்கிறது என்றதும் உற்சாகமடைவீர்கள். ஆனால், உண்மையில் இப்போது மிக மோசமான ஒரு பனிப்பொழிவு இருக்கிறது.

இது ஆபத்தானது. எனவே, பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்" என எச்சரித்துள்ளார்.

22 ஆயிரம் விமானங்கள் தாமதம்

செவ்வாய்க் கிரகம் போல் மாறும் அமெரிக்கா - பனிப்புயல் எச்சரிக்கை விடுத்த பைடன் | New Usa Bomb Cyclone Affectig Chirstmas Holidays

அங்குப் பனியை அகற்றும் பணிகளில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், பனி தொடர்ந்து பெய்து வருவதால் அதில் சிரமம் தொடர்கிறது.

இதனால் கிறிஸ்துமஸ் தினத்திற்கு முன்பே பல ஆயிரம் பேரால் தங்களின் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

நேற்று மட்டும் சுமார் அமெரிக்க முழுதும் 22 ஆயிரம் விமானங்கள் தாமதமாகியுள்ளன. அதேபோல சுமார் 5,500 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அடுத்த சில நாட்களுக்கு அங்கு இதேநிலை தொடரும் என அஞ்சப்படுகிறது.

வெடிகுண்டு சூறாவளி

செவ்வாய்க் கிரகம் போல் மாறும் அமெரிக்கா - பனிப்புயல் எச்சரிக்கை விடுத்த பைடன் | New Usa Bomb Cyclone Affectig Chirstmas Holidays

அழுத்தம் குறைந்து குளிர்ந்த காற்று நிறை வெப்பமான காற்றில் மோதும் போது, ​​"பாம்போஜெனிசிஸ்" எனப்படும் "வெடிகுண்டு சூறாவளியை உருவாக்கும் ஆபத்து உள்ளது.

இதனால் புயல் வேகமாக வலுவடையவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதனால் வியாழக்கிழமை நேற்று மிகக் குளிரான ஒரு இரவு ஏற்பட்டுள்ளது.

அங்கு -40 டிகிரி பரனைட்டை எட்டியுள்ளது. சில இடங்களில் -60 டிகிரி பரனைட் வரை வெப்பம் செல்லும் என அஞ்சப்படுகிறது.

அவசர நிலை

செவ்வாய்க் கிரகம் போல் மாறும் அமெரிக்கா - பனிப்புயல் எச்சரிக்கை விடுத்த பைடன் | New Usa Bomb Cyclone Affectig Chirstmas Holidays

இது கிட்டதட்ட செவ்வாய்க் கிரகத்திற்கு இணையான குளிராகும்.

அங்கு சில நகரங்களில் ஒரே நாளில் சுமார் 20 செமீ அளவுக்கு பனி பெய்துள்ளது. கடந்த நூற்றாண்டில் இல்லாத அளவுக்குப் பனியும் பனி சூறாவளியும் வீசி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பல்வேறு மாகாணங்களில் அவசர நிலையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கடும் பனி சூறாவளியால் அங்குப் பல ஆயிரம் வீடுகளுக்கு வழங்கப்பட்ட மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026