இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்பில் வெளியாகிய தகவல்!
நாட்டில் நேற்றைய தினம் 2,436 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொடர்பில் அறிவிக்கும் அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 17 பேரும் அடங்குவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 230,692 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை நேற்று கொரோனாதொற்றிலிருந்து மேலும் 1,667 பேர் குணமடைந்தனர். தொற்றுநோயியல் பிரிவு விடுத்துள்ள நாளாந்த அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 194,145 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் தொற்று உறுதியான 34,232 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.