27வருட இல்லற வாழ்க்கை! உத்தியோகபூர்வமாக விவாகரத்துப் பெற்ற பில் கேட்ஸ் - மெலிண்டா தம்பதிகள்
Divorce
Bill Gates
Melinda
By Chanakyan
மைக்ரோசொப்ட் இணைத்தலைவர் பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா ஆகியார் விவாகரத்து செய்து கொண்டதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
27 ஆண்டுகள் கணவன் மனைவியாக வாழ்ந்த இந்த இருவரும் விவாகரத்து செய்யப்போவதாக 3 மாதங்களுக்கு முன்னர் அறிவித்தனர்.
வொஷிங்டன் மாநில விதிகளின் படி விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடினால் 90 நாட்களுக்குப் பிறகே அது உத்தியோகபூர்வமாக வழங்கப்படும்.
அதன்படி வொஷிங்டன் கிங் கவுன்டி நீதிமன்றத்தில் இருவருக்கும் விவாகரத்து வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
மெலிண்டா பிரெஞ்சு கேட்ஸ் வொஷிங்டனின் கிங் கவுண்டியில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி