கிளிநொச்சியில் விபத்து! சம்பவ இடத்திலே குடும்பஸ்தர் பலி
கிளிநொச்சி ஏ-9 பிரதான வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று (21.04.2026) இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் படுகாயமடைந்த தர்மராசா என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
நீதிமன்றில் முன்னிலை
யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த KW 8757 இலக்கமுடைய கார், 259 ஆம் கட்டை சந்திக்கு அருகாமையில் வீதியால் நடந்து சென்றுகொண்டிருந்த நபர் மீது மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக விசாரணையில் தெரிவந்துள்ளது.

விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதி தற்போது கிளிநொச்சி காவல்துறையால் கைது செய்யப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வாகன சாரதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறைனர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |