தோட்டத் தொழிலாளர் சம்பள அதிகரிப்பு : அரசாங்கம் நிதி ஒதுக்குவதற்கு எதிர்ப்பு
தோட்டத் தொழிலாளர்களின் ஊதியத்தை அதிகரிக்க இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் இருந்து ரூ. 500 மில்லியன் ஒதுக்குவது குறித்து சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொது சேவை ஊழியர் சங்கம் விவாதித்து வருகிறது, மேலும் இது தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து 19 ஆம் திகதி இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அன்டன் மார்கஸ் இன்று (17) தெரிவித்தார்.
நிதி ஒதுக்கீடு தொடர்பாக தற்போது ஆய்வு நடத்தப்பட்டு வருவதாகவும், ஆய்வின் பின்னர் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அன்டன் மார்கஸ் கூறினார்.
பல தொழிற்சங்கங்கள்
அதிக எண்ணிக்கையிலான ஊழியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல தொழிற்சங்கங்கள் சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொது சேவை ஊழியர் சங்கத்துடன் கூட்டணியில் உள்ளன.

இந்த ஆண்டு பட்ஜெட்டில் மலையக தொழிலாளர்களின் தினசரி ஊதியத்தை ரூ. 1,350 இலிருந்து ரூ. 1,750 ஆக உயர்த்த முன்மொழியப்பட்டுள்ளது. மேலும் அதிகரிக்கப்பட்ட ரூ. 400 இல் ரூ. 200 ஐ கம்பனிஉரிமையாளர் செலுத்த வேண்டும் என்றும் மீதமுள்ள ரூ. 200 ஐ அரசாங்கம் செலுத்த வேண்டும் என்றும் பட்ஜெட்டில் முன்மொழியப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்தள விமான நிலையத்தை குறி வைக்கும் அமெரிக்கா 4 நாட்கள் முன்