யாழில் கல்சியம் நீக்கியை குடித்த குடும்பஸ்தர் உயிர்மாய்ப்பு!
Jaffna
Death
By Kajinthan
யாழில் கல்சியம் நீக்கியை அருந்திய குடும்பஸ்தர் ஒருவர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் அத்தியடி பகுதியைச் சேர்ந்த துரைராசா புஸ்பநாதன் (வயது 51) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் நேற்றுமுன்தினம் இரவு வீட்டில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கல்சியம் நீக்கியை குடித்துள்ளாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்சியம் நீக்கி குடித்து உயிர்மாய்ப்பு
இதன் பின்னர் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்ப்பிக்கப்பட்டுள்ளார்.

எனினும் இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் யாழ்ப்பாணம் காவல்துறையினர் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்