வற் வரி தொடர்பில் கருத்து வெளியிடும் அரசியல் கட்சிகள் : பொய் பிராச்சாரங்களை மேற்கொள்வதாக குற்றச்சாட்டு (படங்கள்)
இலங்கையில் இந்த ஆண்டின் அக்டோபர் மாத இறுதிக்குள் அதிபர் தேர்தல் நடத்தப்படுமென ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன உறுதியளித்துள்ளார்.
அரசியலமைப்பில் அதிபர் தேர்தலை நடத்த வேண்டிய தினம் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கமைய எதிர்வரும் நாட்களில் தேர்தலை நடத்துவதற்கான உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென கிளிநொச்சி மாவட்ட செயலகத்துக்கு இன்று (3) பயணம் செய்த வஜிர அபேவர்தன ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
பொய் பிரச்சாரங்கள்
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகள் கடந்த 75 ஆண்டுகளாக பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டு நாட்டின் நிலையை வீழ்ச்சியடைய செய்தது.
வவுனியாவில் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்: பயிர்களுக்கு நோயை பரப்பும் புதிய பூச்சி இனம்(படங்கள்)
இந்த நிலையில், பொய்யான தகவல்களை வெளியிடும் கலாச்சாரத்தை தற்போது அரசியல் கட்சிகள் கைவிட வேண்டும்.
பெறுமதி சேர் வரி
பெறுமதி சேர் வரி குறித்து தற்போது அனைத்து அரசியல் கட்சிகளும் கருத்து வெளியிடுகின்றன.
எனினும், புதிதாக 97 பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு மாத்திரமே இந்த வரி அறவிடப்பட்டுள்ளது.
ஏனைய பொருட்களுக்கு 15 வீத வரி ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. குறித்த பொருட்களுக்கு 3 வீத வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.
நிதி கட்டுப்பாடு
எமக்கு வேறு வழியில்லை. இதனால் இந்த வழியிலேயே, நாம் அனைவரும் பயணிக்க வேண்டியுள்ளது.
இலங்கையில் சரியான நிதி கட்டுப்பாடு இல்லாத காரணத்தால், சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட இலங்கைக்கான கடன் வழங்குநர்கள் இங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
பெற்றோல், டீசல், மண்ணெண்ணை இல்லாத நாட்டில் தற்போது அனைத்தும் உள்ளது.
எனினும், இதன் கட்டணங்கள் அதிகமாக உள்ளது. இவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
பொருட்களின் கட்டணங்கள்
நிதி கட்டுப்பாடு சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டால் பொருட்களின் கட்டணங்கள் குறைக்கப்படும்.
இதற்கான நடவடிக்கைகளை அதிபர் ரணில் விக்ரமசிங்க முன்னெடுப்பார்” என தெரிவித்தள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |