பிரகீத் எக்னெலிகொட கடத்தல் சம்பவம்... இராணுவ அதிகாரிக்கு பதவி உயர்வு : எழுந்துள்ள சர்ச்சை
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் கடத்தல் சம்பவத்தில் குற்றச்சாட்டுக்குள்ளான இராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரிக்கு பதவி உயர்வுக்கு பலரும் எதிர்ப்புக்களை வெளியிட்டு வருகின்றனர்.
பிரகீத் எக்னெலிகொடவின் கடத்தல் மற்றும் காணாமல் போன சம்பவம் தொடர்பில் இராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரி கர்னல் எராந்த ரதீஷ் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருந்தார்.
இந்தநிலையில் அவரை, பிரிகேடியராக பதவி உயர்த்தியதை எதிர்த்து ஊடக சுதந்திர அமைப்புகள் மற்றும் பலர் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.
ஜனாதிபதிக்கு கடிதம்
அத்துடன் இந்த விடயம் குறித்து எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

மேலும் குறித்த பதவி உயர்வு நீதித்துறை செயல்முறையை பாதிக்கக் கூடும் எனவும் சந்தியா எக்னெலிகொட எச்சரித்துள்ளார்.
இதேவேளை குறித்த நடவடிக்கை சட்டத்தின் ஆட்சி மற்றும் பொறுப்புக்கூறலில் பொதுமக்களின் நம்பிக்கையைக் குலைக்கும் எனவும் சிவில் சமூக அமைப்புகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |