உயர் பாதுகாப்பு வலய காணி விடுவிப்பு கோரி 32ஆவது வாரமாக தொடரும் போராட்டம்
யாழ்ப்பாணம் - வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி காணி உரிமையாளர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
இராணுவத்தினரின் "கொமோண்டோ " பங்களா முன்பாக இன்றைய தினம் (27) வெள்ளிக்கிழமை 32ஆவது வாரமாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வலி. வடக்கில் 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்த மக்கள் கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாத கால பகுதியில் அவர்களது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக காணப்படுகிறது.
உயர்பாதுகாப்பு வலயம்
யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த நிலையிலும், அப்பகுதிகளில் இருந்து பாதுகாப்பு தரப்பினர் வெளியேறாத நிலையில், அவை உயர்பாதுகாப்பு வலயமாகவே காணப்படுகிறது.

தமது காணிகளை விடுவிக்குமாறு பல வருடங்களாக காணி உரிமையாளர்கள் போராடி வரும் நிலையில் காணிகள் விடுவிக்கப்படாமையால் காணிகளை விடுவிக்குமாறு பிரதி வெள்ளிக்கிழமைகளில் போராட்டங்களை முன்னெடுப்பதாக காணி உரிமையாளர்கள் முடிவெடுத்திருந்தனர்.
இந்த நிலையில், இன்றைய தினம் 32ஆவது வெள்ளிக்கிழமை குறித்த போராட்டத்தை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் உள்நாட்டு போரில் மக்களைக் காக்கத் தவறிய ஐ.நா : தனது தோல்வியை தானே ஒப்புக்கொண்டது மனித உரிமைகள் ஆணையம்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |