குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் ரணில் : சஜித் குற்றச்சாட்டு

Ranil Wickremesinghe Sajith Premadasa Sri Lanka
By Sathangani Jul 31, 2024 11:01 AM GMT
Report

நாட்டை வங்குரோத்தாக்கிய பொருளாதார குற்றவாளிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) அடைக்கலம் கொடுத்து வருகிறார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) பொலன்னறுவை (Polonnaruwa) மாவட்ட பிக்குகள் மாநாட்டில் நேற்று (30) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் ”எமது நாட்டின் பொருளாதாரம், சமூகம், அரசியல், மதம் ஆகிய அம்சங்கள் முற்றாக சீரழிந்து வருகின்றன.

ஜனாதிபதி தேர்தல்: கட்டுப்பணத்தை செலுத்தினார் சஜித்

ஜனாதிபதி தேர்தல்: கட்டுப்பணத்தை செலுத்தினார் சஜித்

 ஜனாதிபதி பகிரங்க சவால் 

நாட்டின் அதியுயர் சட்டமான அரசியலமைப்பை பகிரங்கமாக மீறுவது, அரசியலமைப்புக்கு நாட்டின் ஜனாதிபதி பகிரங்கமாக சவால் விடுவது, ஜனநாயகத்தின் மூன்று தூண்களுக்குமிடையே இருக்க வேண்டிய தடைகள் மற்றும் சமன்பாடுகள் உட்பட ஒட்டுமொத்த ஜனநாயகக் கட்டமைப்பும் முற்றிலுமாக சீரழிக்கப்பட்டு வருகின்றன.

மறுபுறம் பாரிய குற்றச் செயல்களால் ஒட்டுமொத்த சமூகமும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. பண்டைய காலத்திலிருந்தே, எமது நாட்டின் சமூக அமைப்பு பௌத்த கொள்கைகள் மற்றும் விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டே கட்டமைக்கப்பட்டு வந்தன.

குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் ரணில் : சஜித் குற்றச்சாட்டு | Ranil Support To Criminals Who Corrupted Sri Lanka

அது தனிமனிதனிடம் தொடங்கி ஒட்டுமொத்த சமூகத்தின் மேற்கட்டுமானம் வரை நீண்டுள்ளது. ஒன்றுக்கொன்று பிணைக்கப்பட்ட பரஸ்பர கடமைகள் எல்லோருக்கும் இருக்கின்றன.

பெற்றோர்கள், பிள்ளைகள், மனைவிகள், தொழில்முனைவோர், ஊழியர்கள், நண்பர்கள், சாதாரண மக்கள், மத போதகர்கள் ஆகியோருக்கு இடையிலான முழு சமூக கட்டமைப்பும் பரஸ்பர கடமைகள் மற்றும் பொறுப்புகளால் பிணைக்கப்பட்டுள்ளது.

ஹமாஸ் தலைவர் படுகொலை : ஜனாதிபதி ரணில் கடும் கண்டனம்

ஹமாஸ் தலைவர் படுகொலை : ஜனாதிபதி ரணில் கடும் கண்டனம்

ஜனாதிபதி ஆதரவு 

ஆனால் இன்று இந்த சமூக விழுமியங்கள், பரஸ்பர கடமைகள், சமூக பொறுப்புகள் போன்றவை கடுமையாக சவாலுக்கு ஆளாகியுள்ளன. மேலிருந்து கீழாக, கீழிருந்து மேல்வரை சவால் விடும் நிலை காணப்பட்டு வருகின்றது.

குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் ரணில் : சஜித் குற்றச்சாட்டு | Ranil Support To Criminals Who Corrupted Sri Lanka

இன்று நாட்டின் தலைவரான ஜனாதிபதியே மீயுயர் சட்டத்தை வெளிப்படையாக மீறி, நாட்டை வங்குரோத்தாக்கிய பொருளாதார குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்து வருகிறார். அவர்களின் உதவியுடனும் தயவுடனும் மீண்டு ஆட்சிக்கு வர முயற்சிக்கிறார்கள்.

நாட்டை ஆட்சி செய்பவர் அநீதி இழைக்கும் போது, ​​சட்டத்தை மதிக்காத போது, ​​திருடர்களைப் பாதுகாக்கும் போது, ​​ஆட்சியாளர் மேலிருந்து கீழ் வரை மோசமான முன்னுதாரணத்தை காட்டுகின்றது.

ஊழல், மோசடி, திருட்டு, சட்டமீறல் என அனைத்து ஒழுக்கக்கேடுகளும் மேலிருந்து கீழ் வரை பரவியுள்ளது” என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மொட்டுவின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களும் ரணிலுக்கு ஆதரவு

மொட்டுவின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களும் ரணிலுக்கு ஆதரவு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023