நிலைமாறும் ரஷ்ய - உக்ரைன் போர்! சீனாவின் நிலைப்பாடு
ரஷ்யா - உக்ரைன் போரானது "முக்கியமான கட்டத்தை" எட்டியுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் நெருக்கடியின் அரசியல் தீர்வுக்கு சீன அரசாங்கம் தொடர்ந்தும் பங்களிக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
உக்ரைன் விமானப்படைத் தளங்களை நேற்றிரவு முழுவதும் தாக்கியதாக ரஷ்யா தெரிவித்துள்ள நிலையில், சீனாவின் இந்த அறிவிப்பு வெளிவந்திருக்கிறது.
இதன் அடிப்படையில், ஓடுபாதையை புனரமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மேற்கு பகுதியான க்மெல்னிட்ஸ்கியில் ஐந்து விமானங்கள் சேவையில் இருந்து அகற்றப்பட்டதாக உக்ரைனும் தெரிவித்துள்ளது.
எறிகணை தாக்குதல்
இது தொடர்பில், பிராந்தியத்தின் ஆளுநர் பாவ்லோ கைரிலென்கோ டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் கிழக்கு உக்ரைன் நகரமான டோரெட்ஸ்க் மீது ரஷ்யா எறிகணை தாக்குதல் நடத்தியதில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளதோடு எட்டு பேர் காயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், ரஷ்ய ஆக்கிரமிப்பில் உள்ள உக்ரைன் பிரதேசங்களில் இந்த ஆண்டு தேர்தலை நடத்த அனுமதிக்கும் சட்டத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
மோதலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்
ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பின் விளைவாக உக்ரைனில் 483 குழந்தைகள் இறந்துள்ளதாகவும், 986 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று உக்ரைனின் பொது வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட தூதர் ஜோசப் பொரெல், உக்ரைனுடனான போரில் வெற்றிபெற முயற்சிக்கும் ரஷ்யா பேச்சுவார்த்தை நடத்தும் என்று தான் நினைக்கவில்லை எனவும், வரவிருக்கும் மாதங்களில் மோதலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் எனவும் கூறியுள்ளார்.