ரஷ்ய விமானம் தடுத்து வைப்பு- விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Russian Federation
Economy of Sri Lanka
By Sumithiran
பாரிய பொருளாதார நெருக்கடி
ரஷ்ய விமானம் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை இலங்கையில் பல பாரிய பொருளாதார நெருக்கடிகளுக்கு வழிவகுக்கும் என அரசியல் விமர்சகர் தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
முதலாவதாக, ரஷ்யாவிலிருந்து சுற்றுலா வருமானம் இழக்கப்படும் என்றும், இரண்டாவது இடத்தில், இலங்கைக்கு வழங்க தயாராக உள்ள மலிவான கச்சா எண்ணெய் இழக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
கலந்து பேசி முடிவெடுக்க வேண்டும்
இலங்கை தேயிலையை அதிகளவில் கொள்வனவு செய்யும் நாடாக ரஷ்யா இருப்பதால், அந்த சந்தையும் பாதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் அரச தலைவர், பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோர் கலந்து பேசி முடிவெடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி