அம்பாந்தோட்டையில் தொடருந்து மோதியில் வெளிநாட்டு பெண் ஒருவர் பலி
அம்பாந்தோட்டை - பெலியத்த பகுதியிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த விரைவு தொடருந்து மோதியதில் இளம் ரஷ்யப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து, இன்று (19.04.2026) கபலானா தொடருந்து கடவையில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் 23 வயதான ரஷ்யப் பெண் காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தொடருந்து மோதி
விபத்து தொடர்பில் தெரியவருகையில், மின்சார மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போதே தொடருந்து மோதி குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், உயிரிழந்த பெண்ணின் சடலம் கராபிட்டிய தேசிய வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், விபத்து நடந்த நேரத்தில் தொடருந்து கடவையில் உள்ள சமிக்ஞை விளக்குகள் எரிந்து கொண்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்தச் சம்பவம் குறித்து அஹங்கம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |