போஷாக்கு மற்றும் ஊட்டச்சத்து தொடர்பில் சஜித் விடுத்துள்ள கோரிக்கை
Sri Lanka Parliament
Sajith Premadasa
Samagi Jana Balawegaya
By Vanan
குழந்தையின் போஷாக்கு மற்றும் தாயின் ஊட்டச்சத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம்(24) இடம்பெற்ற நாடாளுமன்ற தெரிவுக்(விசேட) குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.
போசாக்கின்மை
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், “சிறுவர் போசாக்கின்மையும் தாய் ஊட்டச்சத்தின்மையும் இரண்டல்ல. இரண்டையும் ஒன்றாக கருத வேண்டிய தருணம் வந்துள்ளது.
குழந்தையின் போஷாக்கு மற்றும் தாயின் ஊட்டச்சத்தை தனித்தனியாக எடுத்துக்கொள்ளக் கூடாது. இரண்டிற்குமே முன்னுரிமை வழங்க வேண்டும்.
வீட்டு அலகுகளுக்குள் பெண்களை மையமாகக்கொண்ட தலையீடு மிகவும் அவசியமானது. மறுபுறம் குடும்ப சுகாதார அலுவலர்கள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும்” என்றார்.


புத்திர சோகத்தில் ஈழ அன்னையர்கள்... இன்று அன்னையர் தினம்… 3 மணி நேரம் முன்

உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்
1 வாரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்