காவல்துறையின் முக்கிய பதவியிலிருந்து விலகிய சமன் ஏக்கநாயக்கவின் மனைவி
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) செயலாளரான சமன் ஏக்கநாயக்கவின் (Saman Ekanayake) மனைவி ரேணுகா ஏக்கநாயக்க தேசிய காவல்துறை ஆணைக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.
ரேணுகா ஏக்கநாயக்கவின் (Renuka Ekanayake) பதவி விலகல் கடிதம் அரசியலமைப்பு சபைக்கு ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரணில் விக்ரமசிங்க தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பில் வாக்குமூலம் அளிக்க சமன் ஏகநாயக்க குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிதிக் குற்றப் பிரிவுக்கு அழைக்கப்பட்ட சில நாட்களுக்குப் பின்னர் ரேணுகா ஏக்கநாயக்க தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.
காவல்துறை மா அதிபர் பதவி
இதேவேளை, காவல்துறை மா அதிபர் பதவியிலிருந்து தேசபந்து தென்னகோனை (Deshabandu Tennakoon) நீக்குவதற்காக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சபாநாயகர், ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள நிலையில், காவல்துறைமா அதிபர் பதவியும் வெற்றிடமாகியுள்ளது.
அதன்படி தேசிய காவல்துறை ஆணைக்குழுவில் தற்போது இரு உயர் பதவிகளில் வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 15 ஆம் நாள் திருவிழா


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 3 நாட்கள் முன்
