சாவகச்சேரி நகரசபையின் செயலாளர் தாபன விதிக் கோவையை மீறுகின்றாரா

Sonnalum Kuttram
By Kajinthan Aug 25, 2026 08:53 AM GMT
Report

சாவகச்சேரி நகரசபையின் செயலாளர் சபையினை தவறாக வழிநடத்தி தினமும் வீட்டில் இருந்து அலுவலகம் சென்று வருவதற்காக நகரசபையின் வாகனத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தி வருவதாக ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது.

இலங்கை நிர்வாக சேவை தரம் 2 இல் உள்ளவர்கள் வீட்டில் இருந்து பணியிடத்திற்குச் செல்வதற்கு தனிப்பட்ட ரீதியில் அரச வாகனங்களை பயன்படுத்த முடியாது எனவும் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட நிர்வாக சேவை அதிகாரிகள் இணைந்து நாளொன்றுக்கு 50 KM க்கு உட்பட்டு பயன்படுத்தலாம் எனவும் நிர்வாக அதிகாரிகளுக்கான தாபன விதிக்கோவையில் சொல்லப்பட்டுள்ளது.

இதற்கு முரணாக சாவகச்சேரி நகரசபையின் செயலாளர் சபையினை தவறாக வழிநடத்தி சபை அனுமதித்தால் தான் வாகனம் பயன்படுத்தலாம் என அறிவுறுத்தி வாகனம் பயன்படுத்த அனுமதிப்பது என தீர்மானம் நிறைவேற்ற செய்துள்ளார்.

போதைப்பொருள் சட்டத்தில் திருத்தம்: புதிய சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு

போதைப்பொருள் சட்டத்தில் திருத்தம்: புதிய சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு

தினமும் 80 KM பயணம்

இதன்போது உறுப்பினர்களால் குறித்த தீர்மானம் தொடர்பில் உள்ளூராட்சி ஆணையாளருக்கு அறிவித்து அவரது அனுதியின் பின்னரே வாகனத்தை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சாவகச்சேரி நகரசபையின் செயலாளர் தாபன விதிக் கோவையை மீறுகின்றாரா | Secretary Of The Chavakachcheri Urban Council

எனினும் உறுப்பினர்கள் கூறிய விடயங்கள் சபைக்கூட்ட அறிக்கையில் உள்ளடக்கப்படாத்தோடு உள்ளூராட்சி ஆணையாளருக்கு அறிவிக்காமலும் தினமும் YY 3619 இலக்கமுடைய நகரசபையின் முச்சக்கரவண்டியில் சாவகச்சேரி நகரசபை எல்லை தாண்டி சாவகச்சேரி பிரதேச சபையின் எல்லை தாண்டியும் வலிகாம்ம் கிழக்கு பிரதேச சபைக்குள் உரும்பிராய் வரையும் தினமும் காலை மாலை என இரண்டு தடவைகள் சுமார் 80 KM கள் வரை பயணித்துள்ளார்என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கைதடி வரையுமே வாகனத்தை பயன்படுத்த போவதாக சபைக்கு தெரிவித்த நிலையில் உரும்பிராய் வரையும் சென்று வந்துள்ளார்.

எனினும் வாகனப் போக்குவரத்து பதிவேடுகளில் தினமும் இரண்டு தடவைகள் சாவகச்சேரி நகராட்சி மன்றத்தில் இருந்து உரும்பிராய் சென்று வருகின்றமை தொடர்பில் பதிவு செய்யாமல் நகரசபை எல்லைக்குள் பல்வேறு தடவைகள் பயணித்தமை போன்றை பதிவு செய்து எரிபொருள் நிரப்பியுள்ளமையும் தெரியவந்துள்ளது.

இதேவேளை நகரசபையின் தவிசாளர் தனது அலுவலக கடமைகளுக்கு கூட இதுவரை தனது சொந்த வாகனத்தினையே பயன்படுத்தி வருகின்றார் என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையிலேயே சபையின் செயலாளர் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து தனிப்பட்ட போக்குவரத்துக்கு சபை வாகனத்தை பயன்படுத்துகின்றார் என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

சாவகச்சேரி நகராட்சி மன்றில் இதுவரை செயலாளர்களாக கடமையாற்றியவர்கள் தூர இடங்களில் இருந்தாலும் தமது சொந்த வாகனங்களிலேயே அலுவலகத்துக்கு வந்த்தோடு அலுவலக கடமைகளுக்கு மட்டுமே சபையின் வாகனங்களை பயன்படுத்தியமை குறிப்பிடத்தக்கது. 

தொடர் மர்மத்தில் வைத்திய நிபுணரின் மரணம்! காவல்துறை விசாரணை தீவிரம்

தொடர் மர்மத்தில் வைத்திய நிபுணரின் மரணம்! காவல்துறை விசாரணை தீவிரம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      


GalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026