வெடிக்கும் இறுதிநிலையில் எக்பிரஸ் பேர்ள் - வெளியான காணொளி
இலங்கையின் கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீப்பிடித்து எரிந்து வருகின்ற எக்பிரஸ் பேர்ள் வெளிநாட்டுக் கப்பலின் முழுமையான பகுதிக்கும் தீ பரவியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு துறைமுகக் கடற்பரப்புக்கு அருகில் கடந்த 21ஆம் திகதி தீப்பற்றிக் கொண்ட சிங்கப்பூர் நாட்டுக் கொடியுடனான எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் தொடர்ந்தும் தீ எரிந்து வருகின்றது.
இலங்கை கடற்படைக் கப்பல் சிந்துரல மற்றும் இந்திய கடலோரக் காவல்படையின் கடல் சுற்றுச்சூழல் சேதத்தை கட்டுப்படுத்தும் திறன் கொண்ட வஜ்ரா (ICGS Vajra) மற்றும் விபாவு (ICGS Vaibhav) என்ற இரண்டு கப்பல்களும், இந்தியாவின் டோனியர் ரக விமானங்களும் பாதிக்கப்பட்ட MV X-PRESS PEARL கப்பல் உள்ள கடல் பகுதிக்கு விரைந்துள்ளன.
இந்த நிலையில், தீயை கட்டுப்படுத்துவது சவால் மிக்கது என இலங்கை கடற்படையின் பேச்சாளரான கப்டன் இந்திக டி சில்வா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த கப்பலின் தற்போதைய நிலை தொடர்பில் வெளியான காணொளி இதோ,