கப்பலில் இருந்த கழிவுப்பொருட்களை எடுத்துச்சென்றோர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!
corona
people
ship
By Shalini
கொழும்பு கடற்பகுதியில் தீப்பற்றியுள்ள எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலிலிருந்து கடலில் வீழ்ந்த கொள்கலன்கள் உட்பட கழிவுப்பொருட்களை எடுத்துச்சென்றோர் தொடர்பில் விசாரணைகள் முனன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறித்த சப்பலில் இருந்து கழிவுப்பொருட்கள் இன்று நீர்கொழும்பை அண்டிய கடற்கரை பகுதிகளில் கரையொதுங்கியிருந்தன.
இவ்வாறு கரையொதுங்கிய, இரசாயனங்கள் உள்ளிட்ட மேலும் சில பொருட்களை வீடுகளுக்கு எடுத்துச்சென்ற நபர்களைத் தேடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இதேவேளை, குறித்த எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலில் இருந்து விழுந்த கொள்கலன்களில் அடங்கியிருந்த பொருட்கள், கொள்கலன்கள் கரையொதுங்கக்கூடிய கடற்கரைகளில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்