மாரடைப்பு மற்றும் பக்கவாதத்திற்கு பயன்படுத்தப்படும் அஸ்பிரின் மாத்திரைக்கு கடும் தட்டுப்பாடு; அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்!
நாளுக்கு நாள் இலங்கையில் மருந்துகளுக்கு தட்டுப்பாட்டு நிலவிக்கொண்ருக்கிறது.
அனைத்து வகையான அவசர மருந்துகளுக்கும் கடுமையான தட்டுப்பாடு நிலவுவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கப் பயன்படுத்தப்படும் அஸ்பிரின் போன்ற அவசரகால மருந்துகளுக்கும் தட்டுப்பாடு நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

தற்போது, அஸ்பிரின் போன்ற அவசரகால மருந்து பற்றாக்குறையின் விளைவாக பல நோயாளிகள் தீவிர அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்க ஊடக செயலாளர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
அந்நிய செலாவணி இல்லாததால், 150 க்கும் மேற்பட்ட முக்கிய மருந்துகள், மருத்துவ பொருட்கள், அறுவை சிகிச்சை பொருட்கள் மற்றும் ஆய்வக பொருட்கள் தற்போதுவரை கிடைக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் மருந்தகங்கள், மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளிலும் 75-மி.கி ஆஸ்பிரின் இல்லாதது தொடர்பில் மக்களிடமிருந்து பல முறைப்பாடுகள் கிடைக்கபெற்றுள்ளதகாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.