பல்கலை மாணவர்களுக்கான விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு
நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் (University Grants Commission) தலைவர் பேராசிரியர் கபில செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை (Local Government Elections) முன்னிட்டே இந்த விடுமுறை வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி எதிர்வரும் 5ஆம், 6ஆம், 7ஆம் திகதிகளில் அனைத்துப் பல்கலைக்கழகங்கள், மற்றும் நிறுவகங்களில் பயிலும் இளமாணி மற்றும் பட்டமேற்க் கல்வி மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்படுகிறது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்
இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு மே மாதம் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, மே 7 ஆம் திகதி பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வாக்களிப்பு நிலையங்களாகவும் வாக்கு எண்ணும் மையங்களாகவும் வாக்குப் பெட்டிகள் மற்றும் பிற தேர்தல் தொடர்பான பொருட்களை விநியோகிப்பதற்கும் சேகரிப்பதற்கும் பாடசாலை வளாகங்களைப் பயன்படுத்த தேர்தல் ஆணைக்குழு விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
