2.5 மில்லியன் டொலர் மோசடி! கொழும்பில் ஐ.எம்.எப் கண்!
இலங்கை நிதி அமைச்சின் கணினிகளையே ஊடுருவி 2.5 மில்லியன் அமெரிக்க டொலரை சுருட்டிய தரப்பு எதுவென்பது குறித்த அசுமாத்தியங்கள் இதுவரை தெரியவராத போதிலும் தற்போது இந்த விடயம் சர்வதேச நாணய நிதியத்தின் கவனத்துக்கும் சென்றுவிட்டது.
இந்த நிலையில் இந்த மோசடியை முதன்முதலாக மக்களுக்கு அம்பலப்படுத்திய சுதந்திர சட்டத்தரணிகள் அமைப்பானது நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷனா சூரியப்பெரும இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று பதவி விலகவேண்டும் என்று வலியுறுத்துவது அநுர அரசாங்கத்துக்கு நெருக்கடிகளை அதிகரித்துள்ளது.
அரசியலில் ஒளிப்பு மறைப்புகள் அவற்றுக்கான மடைமாற்றங்கள் போன்ற தில்லாலங்கடிகளில் தற்போதைய ஆட்சித்தரப்புக்கும் விதிவிலக்கு இல்லையென்பது அண்மைய நகர்வுகளில் தெரிகிறது.
இதனால் தான் இந்த விடயத்தை நான்கு மாத காலத்துக்கு மக்களிடம் இருந்து மறைத்தோம் அதில் என்ன பிழையென்கிறது அநுர தரப்பு என உள்ளூர் விடயங்கள் இவ்வாறு இருக்கின்றது.
மத்திய கிழக்கு அமெரிக்க ஈரானிய போரில் ஒரு தற்காலிக நிறுத்தம் இருந்தாலும் தாங்கிகளின் போர் எனப்படும் ஒரு மறைமுக போர் இரண்டு தரப்புக்களாலம் நடத்தப்படுவது 1980களின் நிலைமையை நினைவூட்டும் நிலையில் உள்ளுர் மற்றும் உலக விடயங்களை மையபபடுத்திவருகிறது செய்திவீச்சு….
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
6 நாட்கள் முன்