திடீரென உயிரிழந்த தந்தை - மீண்டும் அணியுடன் இணையும் துனித் வெல்லாலகே
தந்தையின் மறைவு காரணமாக நாட்டு திரும்பி இருந்த துனித் வெல்லாலகே மீண்டும் இலங்கை அணியுடன் இணைய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த வகையில் அவர் இன்று இரவு டுபாய் நோக்கி பயணமாக உள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
துனித் வெல்லாலகேயின் தந்தை சுரங்க வெல்லாலகே தனது 54 வயதில் கடந்த வியாழக்கிழமை மாரடைப்பு காரணமாக காலமானார்.
மாரடைப்பு காரணமாக மரணம்
அபுதாபியில் நடைபெற்ற குழு சுற்றுப் போட்டி முடிந்த சில நிமிடங்களில், அணியின் உடைமாற்றும் அறையில் இருந்த போது இந்த துயரச் செய்தி வெல்லலாகேவுக்கு (Dunith Wellalage) தெரிவிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து, வெல்லலாகே போட்டிக்குப் பிறகு ஹோட்டலுக்கு திரும்பி, அதிகாலை விமானம் மூலம் கொழும்புக்கு வந்தடைந்தார்.
தந்தையின் திடீர் மரணத்தைத் தொடர்ந்து இலங்கைக்கு வந்த துனித் வெல்லாலகே, இலங்கை அணியில் இணைவதற்காக இன்று (செப்டம்பர் 19) இரவு துபாய் புறப்பட உள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும், துனித் வெல்லாலகேவின் (Dunith Wellalage) தந்தையின் மறைவுக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) இரங்கல் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
