சிங்கப்பூரிடம் இருந்து கடனுக்கு கச்சா எண்ணெய் பெறும் இலங்கை
Singapore
SriLanka
crude oil
borrows
By MKkamshan
சிங்கப்பூர் கடன் அடிப்படையில் இலங்கைக்கு கச்சா எண்ணெய்யை வழங்க இணங்கியுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க (Sumit Wijesinghe) தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரிடம் இருந்து கடன் அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்படும் கச்சாய் எண்ணெய் எதிர்வரும் ஜனவரி மாத நடுப் பகுதியில் கிடைக்கும். இதன் மூலம் சபுகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை தொடர்ந்தும் இயக்க சந்தர்ப்பம் கிடைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
180 நாட்களுக்கு கடனை செலுத்தும் இணக்கத்தின் கீழ் சிங்கப்பூரிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஆறு கட்டங்களாக இந்த கச்சா எண்ணெய் தொகை பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.
3ம் ஆண்டு நினைவஞ்சலி