தமிழர் பகுதியில் மாணவர்களை ஏற்றிச் சென்ற உழவியந்திரம் தடம் புரண்டு விபத்து!
Mullaitivu
Sri Lanka Police Investigation
By Laksi
முல்லைத்தீவு- முள்ளியவளைப் பகுதியில் உழவியந்திரம் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியதில் அதில் சென்ற மாணவர்கள் மூவர் படுகாயம் அடைந்துள்ளனர்.
குறித்த விபத்தானது இன்று (14)முள்ளியவளை ஆலடி சந்தி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
உழவியந்திரம் தடம் புரண்டு விபத்து
முள்ளியவளை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் இல்ல விளையாட்டுப் போட்டி ஒன்று நாளை நடைபெற உள்ள நிலையில் அதற்கான பொருட்களை ஏற்றுவதற்காக பத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் உழவியந்திரத்தில் சென்ற வேளை உழவியந்திரம் தடம் புரண்டுள்ளது.
இந்நிலையில், காயமடைந்த மூன்று மாணவர்களும் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பில் முள்ளியவளை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி