சுசில் பிரேமஜயந்த மீதான பிடியை இறுக்கும் ஆளும்தரப்பு
slpp
Sagara Kariyawasam
Susil Premajayantha
disciplinary inquiry
By Sumithiran
அரசாங்கத்தை விமர்சித்ததன் காரணமாக இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சுசில் பிரேமஜயந்த(Susil Premajayantha) மீது ஒழுக்காற்று விசாரணை நடத்துவதற்கு ஆளும்தரப்பு தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு சிறிலங்கா பொதுஜன பெரமுனவிற்குள் இருந்து அதிகளவான கோரிக்கைகள் தமக்கு கிடைத்துள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம்(Sagara Kariyawasam) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கட்சியின் மத்திய குழுவை கூட்டி தீர்மானம் எடுக்க வேண்டும் எனவும் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் மத்திய குழு கூட்டத்திற்கான திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
5ம் ஆண்டு நினைவஞ்சலி