யாழில் கத்தி வெட்டில் முடிந்த சம்பவம் - மதுவால் இளைஞருக்கு நேர்ந்த கதி
Sri Lanka Police
Jaffna
Sri Lanka
By pavan
மதுபோதையில் வீடு ஒன்றுக்குள் பிரவேசித்து தர்க்கத்தில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் வீட்டாரின் கத்திக்குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (26) ஞாயிற்றுக்கிழமை 300 வீட்டுத்திட்டம் நாவற்குழி பகுதியில் இடம்பெற்றுள்ளது. அதேபிரதேசத்தை சேர்ந்த கே. மிதுர்சன் (வயது 22) என்பவரே இவ்வாறு கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார்.
குறித்த இளைஞன் மது போதையில் வீட்டுக்குள் நுழைந்து தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் வீட்டில் இருந்தவர் கத்தியால் வெட்டியுள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதி

இந்நிலையில், படுகாயமடைந்த இளைஞன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இச் சம்பவம் குறித்து சாவச்சேரி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி