கொக்கெய்ன் போதைப்பொருளை சட்டபூர்வமாக்க உள்ள ஐரோப்பிய நாடு
சுவிஸ்லாந்தின் தலைநகா் பொ்னில் கடுமையான சட்டதிட்டங்களுக்கு இடையிலும் போதைப் பொருள் விற்பனை கள்ளச்சந்தையில் அமோகமாக நடைபெறுகிறது.
இதனை கருத்திற்கொண்டு அந்நாட்டு அரசு முக்கிய தீர்மானமொன்றினை நடைமுறைப்படுத்தவுள்ளது.
அதன்படி, கொக்கெய்ன்போதைப் பொருளை சுவிஸ்லாந்தின் தலைநகா் பொ்னில் சட்டபூா்வமாக அனுமதிப்பது குறித்து உலகிலேயே முதல்முறையாக அந்த நாட்டு அரசு பரிசீலித்து வருகின்றது.
கேளிக்கைப் பயன்பாட்டுப் பொருள்
அந்த நகரில் கொக்கெய்ன் போதைப் பொருள் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் பலன் அளிக்காமையினாலேயே மேற்படி தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
எனவே, கொக்கெய்னை சட்டபூா்வ கேளிக்கைப் பயன்பாட்டுப் பொருளாக அங்கீகரித்தால் அதன் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தவும், சந்தையைக் கண்காணிக்கவும் முடியும் என்று நிபுணா்கள் கூறி வருகின்றனா்.
நாடாளுமன்றம் ஆதரவு
அதையடுத்து, சோதனை முறையில் கொக்கெய்னை சட்டபூா்வமாக்குவதற்கு நாடாளுமன்றம் ஆதரவு தெரிவித்துள்ளது.
எனினும், அதனை செயல்படுத்த பொ்ன் மாநகராட்சி ஒப்புதல் அளிக்க வேண்டும்.
அத்துடன், அரசியல் சாசனத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |