சிரியாவின் விமானப்படை தளத்திலிருந்து வெளியேறின அமெரிக்கப்படைகள்
வடகிழக்கு சிரியாவில் உள்ள கஸ்ராக் விமானப்படைத் தளத்திலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து, அத்தளத்தை சிரிய இராணுவம் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளது என இன்று(16)வியாழக்கிழமை வெளியிடப்பட்ட ஓர் அதிகாரபூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க தலைமையிலான கூட்டணிப் படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து, ஹசகாவின் கிராமப்புறத்தில் உள்ள அத்தளத்தை தங்கள் படைகள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்ததாக,சிரிய பாதுகாப்பு அமைச்சகத்தை மேற்கோள்காட்டி அரசு செய்தி நிறுவனமான SANA வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தளத்திலிருந்த வாகனங்களுக்கு தீ வைப்பு
அமெரிக்கப் படைகள் தளத்தைக் காலி செய்த பிறகு, YPG/SDF பயங்கரவாதக் குழுவுடன் தொடர்புடையவர்கள் அத்தளத்திற்குள் இருந்த சில வாகனங்களுக்கு தீ வைத்ததாக உள்ளூர் வட்டாரங்கள் தெரிவித்தன.

பின்னர் அத்தளம் சிரிய இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. காமிஷ்லி மற்றும் ஹசகாவில் உள்ள பாதுகாப்பு அலுவலகங்கள் மூலமாகவும், இஸ்திராஹத் அல்-வஸீர் தளத்திலும் அமெரிக்கப் படைகள் தொடர்ந்து தங்கள் இருப்பை நிலைநிறுத்தியுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

