தமிழரசுக் கட்சியில் 77 வருடம் இல்லாத சண்டித்தனம் தற்போது மேலோங்குகிறது

Ilankai Tamil Arasu Kachchi TNA M A Sumanthiran S. Sritharan Sonnalum Kuttram
By Kajinthan Jun 04, 2026 05:21 AM GMT
Report

தமிழரசுக்கட்சியின் 77 ஆண்டு கால வரலாற்றில் இடம்பெறாத சம்பவங்கள் எல்லாம் இப்போது திணிக்கப்படுகின்றன. ஜனநாயக ரீதியான செற்பாடுகளில் கவனம் செலுத்தவேண்டுமென கூறுகின்ற அதேவேளை அடாத்தும் சண்டித்தனமும் மேலோங்குவதாகத் தோன்றுகிறது.

கறையான் புற்றெடுக்க கொடிய நாகங்களும், விச யந்துக்களும் குடிகொண்டு சன்னதமாடுகின்ற நிலை போன்று, கட்சியை அந்த நிலைக்குத் தள்ளிவிட முடியாது என்று தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர் சேவியர்.குலநாயகம் தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற தமிழரசுக்கட்சியின் மாவட்டக் கிளைக் கூட்டம் தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியினுடைய மத்திய செயற்குழு உறுப்பினர்களுக்கும் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களுக்கும் எழுதிய கடிதத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எழுச்சி பாடல்களை அனைத்தும் விடுதலைப்புலிகள் அமைப்பின் பாடல்களாகக் கருதுவது சரியானதா!

எழுச்சி பாடல்களை அனைத்தும் விடுதலைப்புலிகள் அமைப்பின் பாடல்களாகக் கருதுவது சரியானதா!

அடாவடித்தன செயற்பாடு

அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழரசுக் கட்சியில் 77 வருடம் இல்லாத சண்டித்தனம் தற்போது மேலோங்குகிறது | Tamil Nadu Partys 77 Year Old Lack Of Discipline

''யாழ்ப்பாண மாவட்ட கிளைத் தலைவர் தெரிவில் இடம்பெற்ற அடாவடித்தன செயற்பாடு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட கிளைக் கூட்டம் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் 31.05.2026 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4.15 மணியளவில் கட்சி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

அக் கூட்டத்திற்கான கடிதத்தினை மாவட்ட கிளைச் செயலாளர் என்ற வகையில் நான் அனுப்பியிருந்தேன். மாவட்ட கிளைத் தலைவரான பெ. கனகசபாபதி கூட்டத்திற்கு தான் வரமுடியாது உள்ளதாகவும், என்னைத் தலைமை தாங்கி நடத்துமாறும் கேட்டுமிருந்தார்.

கூட்டம் ஆரம்பமாவதற்கு முன் வயதையும் கருத்திற்கொண்டு மரியாதையின் நிமித்தமும் சிவஞானம் தலைமை தாங்கி நடத்துமாறும் கேட்டுக்கொண்டேன்.

தலைமை தாங்க சம்மதித்த அவர் கூட்டம் ஆரம்பமானதும் எழுந்து நின்று கூட்டத்தினை  சுமந்திரன் நடத்துவார் என அறிவித்தார். எனக்கு அதிர்ச்சியாக இருந்த போதிலும் கட்சி நலன் கருதி சமாளித்துக்கொண்டேன்.

தான் தலைமை தாங்காதுவிடின் என்னிடம்தான் கூறியிருக்க வேண்டும். நானே கூட்டத்தினை நடத்தி முடித்து இருப்பேன்.

பின் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய  சுமந்திரன் அறிவித்து செயலாளர் தெரிவு இடம்பெற்றது. தொடர்ந்து உடனேயே  சிவஞானத்தினை தானே பிரேரித்து அந்த இடத்திலிருந்து தான் தலைமை தாங்குவதால் மாற்றுப் பிரேரணைக்கு இடமில்லை என்றும் எவரும் ஆமோதிக்க கூட தேவையில்லை என தெரிவித்த போது சபையிலிருந்தவர்கள் அதனை ஆட்சேபித்தார்கள்.

நான் கடுமையாக எதிர்த்து மற்றவர்களின் கருத்துக்கும் இடமிருக்க வேண்டும் என வற்புறுத்தினேன். இது தொடர்பான கருத்துக்கள் தெரிவித்தவர்களை அடாத்தாக அமரச் செய்து அவர்களது கருத்துக்களை மறுத்து  சிவஞானமே தலைவர் என அறிவித்தார்.

அக்கரைப்பற்றில் நீதிபதி இடைநீக்கத்தில் வெடிக்கும் காணி மோசடி சர்ச்சை

அக்கரைப்பற்றில் நீதிபதி இடைநீக்கத்தில் வெடிக்கும் காணி மோசடி சர்ச்சை

77 ஆண்டு கால வரலாறு

இதனை ஏற்காத நான் கட்சி நலன் கருதி அமைதியாக இருந்து விட்டேன். மற்றவர்களின் கருத்துக்களுக்கும் ஆலோசனைகளுக்கும் இடமளிக்காமலே  சிவஞானத்தை தலைமை தாங்க அமர்த்தினார்.

தமிழரசுக் கட்சியில் 77 வருடம் இல்லாத சண்டித்தனம் தற்போது மேலோங்குகிறது | Tamil Nadu Partys 77 Year Old Lack Of Discipline

இச்செயற்பாடு ஒருவராலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இலங்கைத்தமிழரசுக் கட்சியில் மட்டுமல்ல வேறெந்த அமைப்புகளிலும் கூட இம்மாதிரியான அடாவடிச் செயற்பாடுகள் இடம்பெற்றது இல்லை.

இலங்கைத்தமிழரசுக் கட்சிக்கென்று ஒழுங்கு முறைகளும் நடைமுறைகளும் உள்ளன. கட்சியின் 77 ஆண்டு கால வரலாற்றில் இடம்பெறாத சம்பவங்கள் எல்லாம் இப்போது திணிக்கப்படுகின்றன.

ஜனநாயக ரீதியான செற்பாடுகளில் கவனம் செலுத்தவேண்டுமென கூறுகின்ற அதேவேளை அடாத்தும் சண்டித்தனமும் மேலோங்குவதாகத் தோன்றுகிறது. கறையான் புற்றெடுக்க கொடிய நாகங்களும், விச யந்துக்களும் குடிகொண்டு சன்னதமாடுகின்ற நிலை போன்று, கட்சியை அந்த நிலைக்குத் தள்ளிவிட முடியாது.

“எனவே இம்மாதிரியான தெரிவுகள் குறித்து கட்சி தீவிர கவனம் செலுத்தி தகுந்த தீர்வைக் காணாது விட்டால் சுயநலத்தாலும் பதவி மோகம் என்பதற்கு அப்பால் பதவி வெறியாலும், காழ்புணர்வுகளாலும் அடாவடித்தனங்கள் சண்டித்தனங்களாலும் பிரதேச வாதங்களாலும் நொருக்குண்டு பலயீனம் அடைந்திருக்கும் எம் கட்சியின் இன்றைய நிலை மேலும் மோசம் அடையும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வவுனியாவில் தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்படும் குளம் : கிராம மக்கள் குற்றச்சாட்டு

வவுனியாவில் தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்படும் குளம் : கிராம மக்கள் குற்றச்சாட்டு

தலைவர் தெரிவு 

கட்சியுடனான எனது 62 ஆண்டுகாலச் செயற்பாடுகளை எண்ணிப் பார்க்கிறேன். வழிப்போக்கனாக இருந்துவிட்டு பதவி பெறுவதற்காக கட்சியில் சேர்ந்து இலாபாம் அல்லது ஏதும் உதவி பெற்றவன் அல்ல நான். இலக்கைத் தமிழரசுக்கட்சி மீது இருக்கும் பேரார்வத்தாலேயே இக் கடிதத்தினை எழுதுகிறேன்.

இதனை மத்திய செயற்குழுவில் ஆய்வு செய்து தகுந்த தீர்வைக் காணவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

தலைமைச் செயலகத்தில் 31.05.2026 அன்று நடைபெற்ற கூட்டத்தில் இடம்பெற்ற தலைவர் தெரிவு எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாததும் கண்டிக்கப்பட வேண்டியதுமாகும்.

எதிர்காலத்தில் இப்படியான நடைமுறைகளை வரும் சந்ததியினருக்கு விட்டுச் செல்லக்கூடாது. இவ்விடயம் முன்னுதாரணமாக கொள்ளப்பட்டு கட்சி சின்னாபின்னமாக்க இடமளிக்கக் கூடாது என்பதற்காக இக் கடிதத்தினை எழுதுகிறேன்.

இக் கடிதத்தை ஏற்று மாவட்ட தலைவர் தெரிவு பற்றிய மத்திய செயற்குழு ஏற்று நடவடிக்கை எடுக்குமென எதிர்பார்க்கிறேன். மேற்படி செயற்பாடு குறித்து எனது கடுமையான எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

மலையகத்தில் கம்பனிகளால் தொடரும் அடக்குமுறை! தாக்கப்பட்ட தொழிலாளியின் மகன்!

மலையகத்தில் கம்பனிகளால் தொடரும் அடக்குமுறை! தாக்கப்பட்ட தொழிலாளியின் மகன்!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026