எதிரிக்கு எதிராக நடத்தப்படவுள்ள தொழில்நுட்ப தாக்குதல்! ஈரானுக்கு அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை
ஈரானின் ஆயுதப் படைகள் தரை, வான், வான் பாதுகாப்பு மற்றும் கடற்படை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைப் பெற்றுள்ளதாக இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் (IRGC) துணைத் தளபதி மேஜர் ஜெனரல் முஸ்தபா இசாதி தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அவரது கருத்துகளில், ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல் படை உள்ளிட்ட நாட்டின் ஆயுதப் படைகள் பல்வேறு இராணுவத் துறைகளில் தங்களது திறன்களை கணிசமாக மேம்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஈரானிய ஆயுதப் படைகள் பல்வேறு நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வருவதாகவும், அவற்றில் சில ஏற்கனவே போர்க்களத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் முஸ்தபா இசாதி தெரிவித்துள்ளார்.
இராணுவ நடவடிக்கை
அதேவேளை, ஏனைய தொழில்நுட்பங்கள் எதிர்கால இராணுவ நடவடிக்கைகளில் பயன்படுத்துவதற்காகத் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இராணுவ பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஈரானிய இராணுவத்தின் தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்புத் திறன்கள் தொடர்பில் அந்நாட்டு உயர்மட்ட இராணுவ அதிகாரிகளின் கருத்துகள் வெளியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |